Thiruppugazh — Muthai Tharu PDF
Full Thiruppugazh — Muthai Tharu lyrics — Sanskrit, transliteration and meaning. Save as PDF or print in one click.
முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக் கிறை சத்திச் சரவண முத்திக் கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
muththaith tharu paththith thirunagai aththik kiṟai saththich saravaṇa muththik koru viththuk gurupara ...... enavōdhum
This is the very first song of the Thiruppugazh ('Glory to the Holy One'), the great Tamil hymn-cycle of Saint Arunagirinathar in praise of Lord Murugan. Tradition holds that Murugan Himself gave Arunagiri the opening words 'Muthai tharu' to begin his songs.
முக்கட் பர மற்குச் சுருதியின் முற்பட் டது கற்பித் திருவரும் முப்பத்து முவர்க்கத் தமரரும் ...... அடிபேண
mukkaṭ para maṟkuch suruthiyin muṟpaṭ ṭadhu kaṟpith thiruvarum muppaththu muvarkkath thamararum ...... aḍipēṇa
The verse extols Murugan as the one whose pearl-like sacred smile bestows the pearl of liberation in devotion; the son of the Mountain-Goddess's Shakti; Saravanabhava; the seed of mukti and the supreme Guru — who taught the foremost meaning of the Vedas even to His three-eyed father Shiva, while the hosts of the gods cherish His feet. It recalls the deeds of Vishnu (Murugan's uncle): He whose arrow made Ravana's ten heads roll, who churned the ocean with Mount Mandara, who turned day to night with His discus — that emerald-hued cloud-dark Lord. Then comes the poet's prayer: 'Will there ever be a day when You protect me too with such loving grace?' The closing lines paint the battlefield where Bhairavi and the eight Bhairavas dance amid drum-beats and the cries of vultures and owls, as Murugan cuts down the friendless demons and pierces the great Krauncha mountain — O Great Lord (Perumale)!
பத்துத் தலை தத்தக் கணைதொடு ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு பட்டப் பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
paththuth thalai thaththak kaṇaithoḍu oṟṟaik kiri maththaip poruthoru paṭṭap pagal vaṭṭath thigiriyil ...... iravāgap
பற்றற் கிரதத் தைக் கடவிய பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள் பட்சத் தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
paṟṟaṟ kirathath thaik kaḍaviya pachchaip puyal mechchath thaguporuḷ paṭchath thoḍu raṭchith tharuḷvadhum ...... orunāḷē
தித்தித் தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப் பதம் வைத்துப் பயிரவி திக்கொட் கந டிக்கக் கழுகொடு ...... கழுதாட
thiththith theya oththap paripura nirththap padham vaiththup payiravi thikkoṭ kana ḍikkak kazhugoḍu ...... kazhudhāḍa
திக்குப் பரி அட்டப் பயிரவர் தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப் பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோத
thikkup pari aṭṭap payiravar thokkuth thogu thokkuth thogudhogu sithrap pavu rikkuth thrigaḍaka ...... enavōdha
கொத்துப் பறை கொட்டக் களமிசை குக்குக் குகு குக்குக் குகுகுகு குத்துப் புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
koththup paṟai koṭṭak kaḷamisai kukkuk kugu kukkuk kugukugu kuththup pudhai pukkup piḍiyena ...... mudhukūgai
கொட்புற் றெழ நட்பற் றவுணரை வெட்டிப் பலி யிட்டுக் குலகிரி குத்துப் பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே
koṭpuṟ ṟezha naṭpaṟ ṟavuṇarai veṭṭip pali yiṭṭuk kulagiri kuththup paḍa oththup poravala ...... perumāḷē