Mantra.Tips

Tiruppavai (Opening Pasurams) — Complete Lyrics

திருப்பாவை

Sanskrit text with English transliteration and translation

Verse 1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணனே நமக்கே பறைதருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
mārgazhith thingaḷ mathiniṟaintha nannāḷāl nīrāḍap pōthuvīr pōthuminō nērizhaiyīr sīrmalgum āyppāḍich selvach siṟumīrgāḷ kūrvēl koḍunthozhilan nandagōpan kumaran ērārntha kaṇṇi yasōdai iḷañchingam kārmēnich sengaṇ kathirmathiyam pōlmugaththān nārāyaṇanē namakkē paṟaitharuvān pārōr pugazhap paḍindhēlōr embāvāy
The Tiruppavai is Andal's garland of thirty pasurams (verses) sung in the sacred month of Margazhi, in which she and her companions, imagining themselves as the cowherd girls (gopis) of Ayarpadi, take up the Paavai Nonbu vow to win the grace of Lord Krishna (Narayana).
Verse 2
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
vaiyaththu vāzhvīrgāḷ nāmum nampāvaikkuch seyyum kirisaigaḷ kēḷīrō pāṟkaḍaluḷ paiyath thuyinṟa paramanaḍi pāḍi neyyuṇṇōm pāluṇṇōm nāṭkālē nīrāḍi maiyiṭ ṭezhuthōm malariṭṭu nām muḍiyōm seyyāthana seyyōm thīkkuṟaḷaich senṟōthōm aiyamum pichchaiyum ānthanaiyum kaikāṭṭi uyyumā ṟeṇṇi ugandhēlōr embāvāy
Verse 1: In the month of Margazhi, on this good day of the full moon, come, O well-adorned maidens, come for our holy bath! O fortunate young girls of prosperous Ayarpadi — the son of Nandagopa of the cruel sharp spear, the young lion of doe-eyed Yashoda, dark-bodied, red-eyed, His face like the radiant moon — Narayana Himself will grant us the 'parai' (the boon). Come, that the whole world may praise us, and take up our vow!
Verse 3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றிநீ ராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
ōngi ulagaḷantha uththaman pērpāḍi nāngaḷ nampāvaikkuch sāṟṟinī rāḍināl thīnginṟi nāḍellām thingaḷmum māripeythu ōngu peruñchenne lūḍu kayalugaḷap pūnguvaḷaip pōthil poṟivaṇḍu kaṇpaḍuppath thēngāthē pukkirundhu sīrththa mulaipaṟṟi vāngak kuḍamniṟaikkum vaḷḷal perumpasukkaḷ nīngātha selvam niṟaindhēlōr embāvāy
Verse 2: O you who live in this world, hear the practices we follow for our vow: we sing the feet of the Supreme One who gently sleeps upon the ocean of milk; we eat no ghee, we drink no milk, we bathe at dawn; we do not darken our eyes with collyrium nor wear flowers in our hair; we do nothing forbidden, speak no slander; we give alms and charity as much as we can, and live thinking only of liberation — take up our vow!
Verse 4
ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
āzhi mazhaikkaṇṇā onṟunī kaikaravēl āzhiyuḷ pukku mugandhuko ḍārththēṟi ūzhi muthalvan uruvampōl meykaṟuththup pāzhiyan thōḷuḍaip paṟpanā pankaiyil āzhipōl minni valampuripōl ninṟathirnthu thāzhāthē sārngam uthaiththa saramazhaipōl vāzha ulaginil peythiḍāy nāngaḷum mārgazhi nīrāḍa magizhndhēlōr embāvāy
Verse 3: Singing the name of the Supreme One who grew tall and measured the worlds (Trivikrama), if we bathe and observe our Paavai vow, then without any harm the land will have rain thrice a month; tall red paddy will flourish, fish will leap among them, spotted bees will sleep in the blue lily blossoms, and generous great cows will fill the milk-pots to overflowing — unfailing prosperity will fill the land. Take up our vow!
Verse 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத் தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோ மாய்வந்து நாம்தூ மலர்தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
māyanai mannu vaḍamathurai mainthanaith thūya perunīr yamunaith thuṟaivanai āyar kulaththinil thōnṟum aṇiviḷakkaith thāyaik kuḍalviḷakkam seytha thāmōdharanaith thūyō māyvandhu nāmthū malarthūvith thozhuthu vāyināl pāḍi manaththināl sindhikkap pōya pizhaiyum pugutharuvān ninṟanavum thīyinil thūsāgum seppēlōr embāvāy
Verse 4: O rain-cloud, deep as the sea, withhold nothing! Plunge into the ocean, draw up its waters, roar and rise; dark like the form of the Primordial Lord, thunder like the discus in the hand of broad-shouldered Padmanabha, flash like His conch, and pour down like the arrow-rain loosed from His Sharnga bow — rain for the world's welfare, so that we too may rejoice to bathe in Margazhi. Take up our vow!

Want to understand every word?

Read Word-by-Word Meaning →