Mantra.Tips

Vinayagar Agaval (Opening) — Complete Lyrics

விநாயகர் அகவல்

Sanskrit text with English transliteration and translation

Verse 1
சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
sīthak kaḷabach senthāmaraip pūm pādhach silambu palavisai pāḍap ponnarai ñāṇum pūnthugil āḍaiyum vanna marungil vaḷarndhazha gheṟippap pēzhai vayiṟum perumbārak kōḍum
The Vinayagar Agaval is the great Tamil hymn to Lord Ganesha (Vinayaka) by the poet-saint Avvaiyar, composed in the flowing 'agaval' (blank-verse) metre. It begins by adoring the Lord from His feet upward: His cool, sandal-anointed lotus-red feet whose anklets sing in many tunes; the golden waist-cord and silken robe; the casket-like belly and the single great tusk; the elephant face bright with vermilion; the five hands bearing goad and noose; the dark form dwelling in the devotee's heart; the eight arms, three eyes and the marks of rut; the two ears, the gleaming golden crown, and the broad chest shining with the three-stranded sacred thread.
Verse 2
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
vēzha mugamum viḷangu sindhūramum añju karamum angusa pāsamum neñjiṟ kuḍikoṇḍa nīla mēniyum nānṟa vāyum nāliru buyamum mūnṟu kaṇṇum mummadhach suvaḍum
Then the poet hails Him as the wonder of supreme Turiya knowledge that lies beyond all words — the wish-granting divine elephant, rider of the mouse, who relishes the three fruits. She prays: at this very moment, desiring to take me as His own, He came to me of His own grace like a mother, cut away the delusion of illusory birth, and clearly revealed the perfect five sacred letters (the Panchakshara). Entering my heart and taking the form of the Guru, He set His holy feet upon this earth, taught me 'this is the Truth', graciously made me rejoice beyond all withering, and with the weapon of His tusk rooted out my cruel karma. The hymn goes on to describe the awakening of the kundalini and the inner yogic experience that Ganesha bestows.
Verse 3
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்ட முப்புரி நூல்திகழ் ஒளிமார்பும் சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே! முப்பழ நுகரும் மூஷிக வாகன!
iraṇḍu seviyum ilangubon muḍiyum thiraṇḍa muppuri nūlthigazh oḷimārbum soṟpadham kaḍantha thuriya meyñ-ñāna aṟpudham ninṟa kaṟpagak kaḷiṟē muppazha nugarum mūṣhika vāhana
Verse 4
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து
ippozhudhu ennai āṭkoḷa vēṇḍith thāyāy enakkuth thānezhun tharuḷi māyāp piṟavi mayakkam aṟuththuth thirundhiya muthalain thezhuththum theḷivāyp porundhavē vandhen uḷandhaniṟ pugundhu
Verse 5
குருவடி வாகிக் குவலயம் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
guruvaḍi vāgik kuvalayam thannil thiruvaḍi vaiththuth thiṟamidhu poruḷena vāḍā vagaithān magizhndhenak karuḷik kōḍā yudhaththāl koḍuvinai kaḷaindhē

Want to understand every word?

Read Word-by-Word Meaning →